சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த சுமதி (30) என்ற பெண் திடீரென மாயமான நிலையில், அவரது தாலிக் கயிறு பார்சலில் வீட்டுக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சுமதியின் கள்ளக்காதலன் வெங்கடேஷ் (22) என்பது தெரியவந்தது. கடந்த 23-ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த வெங்கடேஷ் சுமதியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் ஆதாரங்களை மறைக்க, அவரது உடலை ஏற்காடு–குப்பனூர் சாலையில் உள்ள 600 அடி ஆழப் பள்ளத்தில் வீசியதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு, சுமதியின் உடலை மீட்கும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.