நாந்தேட் மாவட்டத்தில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுசீலா வாக்மாரே என்ற 60 வயது மூதாட்டியை பாம்பு ஒன்று கடித்தது. பாம்பு கடித்த அதிர்ச்சியிலும், அது தன் கையைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதாலும் செய்வதறியாது தவித்த அந்த மூதாட்டி, சற்றும் தயங்காமல் தனது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் பாம்பின் தலையைப் பிடித்துக் கொண்டார்.
பின்னர், அந்தப் பாம்பை கையிலேயே பிடித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் சென்றார். மூதாட்டி கையில் பாம்புடன் மருத்துவமனைக்குள் நுழைந்ததைப் பார்த்த மருத்துவர்களும், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் சிதறி ஓடினர்.
மருத்துவமனைக்குச் சென்றதும் மருத்துவர்கள் விரைந்து செயல்பட்டு மூதாட்டிக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்தனர். அந்தப் பாம்பு ‘தாமன்’ வகையைச் சேர்ந்த நஞ்சற்ற பாம்பு என்பது தெரியவந்ததால், பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
नांदेडमधील घटना, शेतात काम करताना सापाने घेतला चावा, 60 वर्षीय सुशीला वाघमारे यांनी सापाला पकडलं आणि रुग्णालय गाठलं pic.twitter.com/LWEgAcBm33
— News18 Marathi (@News18_marathi) July 6, 2026
“>
தற்போது அந்த மூதாட்டியின் உடல்நிலை சீராக உள்ளது. ஆபத்தான சூழலிலும் பதற்றமடையாமல், தன்னை கடித்த பாம்பைப் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அந்த மூதாட்டியின் வீரத்தையும், சமயோசித புத்தியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
