மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாம்னோத் பேருந்து நிலையத்தில், திங்கள்கிழமை இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடத்திய விசித்திரமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீல நிற ஆடை அணிந்திருந்த அந்தப் பெண், திடீரென பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியேறி அதன் மேற்கூரையின் மீது ஏற முயன்றார். தன்னை ‘தெய்வத்தின் அவதாரம்’ என்று உரக்கக் கூறியபடி அவர் செய்த இந்தச் செயலைக் கண்டு, அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பேருந்து ஓட்டுநர் மிகுந்த பொறுமையுடன் பேருந்தை நிறுத்தி, அந்தப் பெண்ணை கீழே இறக்க முயற்சி செய்தாலும் அவர் கேட்கவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நான் ஒரு தெய்வம் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்த அந்தப் பெண்ணை, கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சமாதானப்படுத்தி, காவல் துறையினர் பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

“>

 

அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவரது குடும்பத்தினர் யார் என்பதைக் கண்டறியும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.