மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில் சுமந்து செல்லப்பட்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்காவன் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் அந்தப் பெண்ணை நீண்ட தூரம் கட்டிலில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேறு நிறைந்த பாதையில் மக்கள் கட்டிலைத் தூக்கிச் செல்லும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, நிர்வாகத்தின் மெத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மத்தியப் பிரதேச சுகாதார அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இத்தகைய அவல நிலை நீடிப்பது மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை மருத்துவ வசதிகள், சாலைகள் மற்றும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவைகள் கூட இல்லாததால், பழங்குடியின மற்றும் கிராமப்புற மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
मध्य प्रदेश के स्वास्थ्य व्यवस्था का हाल
सरकार बताएं स्वास्थ्य व्यवस्था है कमालजमीन पर एंबुलेंस तक नहीं मिल रही
जान चली जा रही बिना इलाज के
सपना बेचा जा रहा है विकसित भारत का 😔 pic.twitter.com/N0Aao9JtiR— Atul Londhe Patil (INDIA Ka Parivar)🇮🇳 (@atullondhe) July 6, 2026
“>
இந்த சம்பவம் குறித்து அரசு தரப்பில் இதுவரை விரிவான பதில் அளிக்கப்படாத நிலையில், இத்தகைய அவல நிலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொலைதூரப் பகுதிகளில் அவசர மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
