சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த பிராங்க் வீடியோ, பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் நிதர்சனம் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. கொலம்பியா அல்லது வெனிசுலாவின் ஏதேனும் ஒரு நகரமாக இருக்கலாம் என்று கருதப்படும் அந்தப் பகுதியில், ஒரு சாதாரண பிராங்க் முயற்சியின் போது மக்கள் காட்டிய எதிர்வினை உலகையே சிந்திக்க வைத்துள்ளது.
மேலும் வயதான முதியவர் முதல் பெண்கள் வரை ஒவ்வொருவரும் தற்காப்பிற்காக கத்தி, வாள் மற்றும் துப்பாக்கி போன்ற ஆபத்தான ஆயுதங்களை எப்போதும் கையில் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. ஒரு நகைச்சுவை வீடியோவாகத் தொடங்கி, இறுதியாக அந்த சமூகத்தின் மிக மோசமான பாதுகாப்புச் சூழலை இந்தத் தொகுப்பு உலகிற்குப் புரியவைத்துள்ளது.
See this Instagram video by @leeeeeee_0l https://t.co/d6bxK0pTij
“>
இதனால் மக்கள் எந்நேரமும் ஒருவித பயத்துடனும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் வாழ்ந்து வருவதை நெட்டிசன்கள் பலரும் கவலையுடன் சுட்டிக்காட்டி வருகின்றனர். சிரிப்பிற்குப் பின்னால் இருக்கும் அந்த மக்களின் அன்றாட பயத்தையும், பாதுகாப்பற்ற வாழ்வாதாரத்தையும் மிக நாசூக்காக இந்த வீடியோ உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்துள்ளது என்பதே உண்மை.
