வெளிநாடுகளில் இந்தியா பற்றிய பாதுகாப்பு குறித்த எதிர்மறையான பிம்பம் நிலவி வரும் நிலையில், எம்மா என்ற பெண் பயணி ஒருவரின் அனுபவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

கேரளா, மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களில் பயணம் செய்த எம்மா, தான் இந்தியாவில் பொது இடங்களில் செல்போனைப் பயன்படுத்தும்போது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், லண்டனில் இருப்பதை விட இங்கு மனஅழுத்தம் இன்றி செல்போனைப் பயன்படுத்த முடிவதாகவும் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார்.

லண்டனில் எப்போதும் செல்போன் திருடப்படும் என்ற பயத்திலேயே அதைப் பையில் பத்திரமாக வைத்திருப்பதாகவும், ஆனால் இந்தியாவில் பயமின்றி தாராளமாக வீடியோக்களைப் பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்மாவின் இந்த கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல வெளிநாட்டுப் பயணிகள், ஐரோப்பிய நகரங்களை விட இந்தியாவில் திருட்டு பயம் குறைவாகவே இருப்பதாக அவரது கருத்தை ஆதரித்துள்ளனர்.

அதேசமயம், இந்தியாவின் சில பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பது உண்மைதான் என்றும், ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்பு உணர்வு மாறுபடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Emma ✈️🌏 UGC | BANGKOK 🇹🇭 | Backpacking South East Asia✨ (@discoverwithemma_)

“>

எம்மாவின் இந்த பதிவு, இணையத்தில் பரப்பப்படும் தகவல்கள் எப்போதும் முழு உண்மையைச் சொல்வதில்லை என்பதை உணர்த்துவதாகவும், பாதுகாப்பான பயணம் என்பது தனிப்பட்ட அனுபவங்களைப் பொறுத்தது என்றும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.