மகாராஷ்டிர மாநிலத்தில் லூடோ விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு இளைஞனின் கொடூரமான கொலைக்கு வழிவகுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 4-ம் தேதி இரவு, ஜாஹித் ஹுசைன் (28) என்பவர் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கோலு என்ற முக்கிய குற்றவாளி கத்தியால் ஜாஹித்தை பலமுறை குத்தியதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கோலு, அமீன் மற்றும் சமீர் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான கோலு, ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் தான் அவர் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார்.
சிறையிலிருந்து வெளிவந்த சில மாதங்களிலேயே அவர் மீண்டும் ஒரு கொலையைச் செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு காரில் தப்பியோடிய கோலுவை, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
