மகாராஷ்டிர மாநிலத்தில் டிராஃபிக்கில் வாகனத்தை ஓட்டிச் சென்றது தொடர்பாக சாதாரண வாய்த் தகராறில், இருசக்கர வாகனத்தில் வந்த இர்ஃபான் பேக் என்ற வாலிபரின் வயிற்றில் கார் ஓட்டுநர் கத்தியால் குத்திய கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இர்ஃபான் பேக் பெட்ரோல் பங்க் அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த ஒரு கார் அவருக்கு முன்னால் பயங்கர ஆபத்தான முறையில் குறுக்கே கட் அடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இர்ஃபான், காரை மறித்து “ஏன் இப்படி வண்டியை ஓட்டுறீங்க?” எனக் கேள்வி கேட்டுள்ளார்; இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநரான லக்ஷ்மிகாந்த் ஷேஜ்வால், சற்று யோசிக்காமல் தனது காரில் இருந்த கத்தியை எடுத்து இர்ஃபானின் வயிற்றில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த கொடூரக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலான நிலையில், மன்மாட் போலீஸார் உடனடியாக வயர்லெஸ் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அலர்ட் கொடுத்து, தப்பி ஓடிய காரை சினிமா பாணியில் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று துரத்தியுள்ளனர்.
#WATCH | #Nashik: Car Driver Stabs Two-Wheeler Rider After Traffic Dispute In #Manmad; Accused Arrested#Maharashtra pic.twitter.com/j6oofaMdgS
— Free Press Journal (@fpjindia) July 6, 2026
“>
போலீசார் செக்போஸ்ட் அமைத்து மறித்த போது, பிடிபடாமல் இருக்க போலீசார் மீதே காரை ஏற்ற முயன்ற அந்த சைக்கோ டிரைவரை, காவல்துறை அதிகாரிகள் அசாத்திய துணிச்சலுடன் காரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தற்பொழுது பலத்த காயமடைந்த இர்ஃபான் பேக்
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
