வழக்கமான பள்ளிப் பேருந்துகள் அல்லது ஆட்டோக்களில் சென்று சோர்ர்ந்துபோகும் மாணவர்களுக்கு மத்தியில், வித்தியாசமான மற்றும் பாரம்பரியமான முறையில் பள்ளிக்குச் செல்லும் அண்ணன்-தங்கை இருவரின் கியூட் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி இணையவாதிகளின் இதயங்களை வென்றுள்ளது.
பெரும்பாலான குழந்தைகள் பஸ் அல்லது சைக்கிளில் பள்ளிக்குப் படையெடுக்கும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த வைரல் காணொளியில் இடம்பெற்றுள்ள சிறுவனும் அவனது தங்கையும் யாருடைய உதவியும் இல்லாமல், தங்களது செல்லக் குதிரைகள் மீது கம்பீரமாக அமர்ந்து பள்ளிக்குச் செல்லும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காலையில் அவசரமாகப் பேருந்துக்காகக் காத்திருக்கும் டென்ஷன் இல்லாமல், இயற்கையான முறையில் குதிரை மீது அமர்ந்து அவர்கள் ஜாலியாகப் பயணம் செய்யும் விதம் பார்க்கவே ரம்மியமாக உள்ளது.
A Viral Video Shows the Most Unique Way to Get to School Brother and Sister Ride Horses Instead of Taking the Bus! #viralvídeo pic.twitter.com/eBhqHHD46Y
— Bindiya rani (@bindiyara13) July 29, 2026
“>
சினிமாக்களில் வருவது போன்ற இந்த அட்டகாசமான பள்ளிப் பயணம் குறித்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்து வருவதுடன், சிறுவயதிலேயே குதிரைச் சவாரி செய்யும் இந்தச் சிறார்களின் திறமையை நெட்டிசன்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
