மகாராஷ்டிராவின் பதலாப்பூர் பகுதியில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில், வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே தட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த காரிதின் பண்டங்களின் மீது எலி ஒன்று சுதந்திரமாக ஊர்ந்து செல்லும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள ஒரு புகழ்பெற்ற பேக்கரிக்குச் சென்ற இளம் பெண் ஒருவர், சுடச்சுடத் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களைக் கவனித்துள்ளார். அப்போது, காரி தட்டுகளுக்கு நடுவே பெரிய எலி ஒன்று எந்தவித பயமும் இல்லாமல் உலா வருவதைக் கண்டு அவர் உடனடியாக தனது செல்பேசியில் அதைப் படம்பிடித்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் வகையில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளைப் பாதுகாத்து வரும் இத்தகைய பேக்கரிகள் மீது கடுமையான உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கண்டனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

 

உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் இதுபோன்ற கடைகளின் முறைகேடுகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளன.