சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம் நெஞ்சை உறைய வைத்து, இரத்தத்தை உரையச் செய்யும் அளவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

அந்த வகையில், ஒரு சிறிய சிறுமி, எவ்வித பயமும் அச்சமும் இன்றி, தன் உடலை விடப் பல மடங்கு பெரிய மற்றும் எடைகொண்ட ஒரு ராட்சச மலைப்பாம்புடன் பொம்மையோடு விளையாடுவது போல மிகச் சாதாரணமா விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

அந்தப் பிஞ்சு சிறுமி, தன்னருகே ஊர்ந்து செல்லும் அந்த ராட்சசப் பாம்பைக் கட்டிப்பிடிப்பதும், அதன் மீது ஏறி அமர்ந்து விளையாடுவதுமான காட்சிகள் காண்போரைச் சிலிர்க்க வைக்கின்றன. பொதுவாகப் பாம்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே படையும் நடுங்கும் என்பார்கள்; பெரியவர்களே பாம்பைக் கண்டால் அலறி அடித்து ஓடும் நிலையில், இந்தப் பிஞ்சு சிறுமிக்கு அந்தப் பாம்பைப் பற்றியோ அல்லது அதன் ஆபத்தைப் பற்றியோ எந்தவிதப் புரிதலும் இல்லாமல் மிக இயல்பாக அதைத் தொட்டு விளையாடுகிறாள்.

மலைப்பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை என்றாலும், அவை தங்களது இரையை நெரித்துக் கொல்லும் அபாரக் காரணியைக் கொண்டவை. ஒரு நொடியில் மனித எலும்புகளை நொறுக்கி, முழுமையாக விழுங்கும் ஆற்றல் கொண்ட அந்த ராட்சச பாம்பு, சிறுமியின் மீது ஊர்ந்து செல்லும்போது சிறுமி சிரித்துக்கொண்டே விளையாடுவது, நெட்டிசன்களைப் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அந்தச் சிறுமியின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் தங்களது பலத்த கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “சமூக வலைதளங்களில் வியூஸ்களுக்காகவும், லைக்ஸ்களுக்காகவும் ஒரு பிஞ்சு குழந்தையின் உயிரை இப்படி ஆபத்தில் தள்ளுவது முற்றிலும் பொறுப்பற்ற தனம்” என்று இணையவாசிகளும், விலங்கு நல ஆர்வலர்களும் கொந்தளித்து வருகின்றனர்.

மேலும், வனவிலங்கு நிபுணர்கள், “மலைப்பாம்புகள் எவ்வளவுதான் மனித பழக்கம் கொண்டவையாக இருந்தாலும், அவை வனவிலங்குகள் என்பதை மறக்கக் கூடாது; எதிர்பாராத நேரத்தில் அவை தற்காப்பிற்காகத் தாக்கும் அபாயம் எப்போதும் உண்டு” என எச்சரிக்கின்றனர். குழந்தைகள் இது போன்ற ஆபத்தான விலங்குகளுடன் விளையாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

“>