இந்தியாவில் உள்ள ‘சகாரா ஏர் கன் ஷாப்’ என்ற காற்றுத் துப்பாக்கி விற்பனைக் கடைக்கு வெளியே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த திடீர் வெடி விபத்து அப்பகுதியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்ப கட்டத் தகவல்களின்படி, அந்தப் பெட்டியில் காற்றுத் துப்பாக்கிக்கான தோட்டாக்கள்  தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான மற்றும் நிலையற்ற கந்தகம் (Raw sulfur) அடிப்படையிலான மூலப்பொருட்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சற்றும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட உராய்வு மற்றும் தாக்கத்தின் காரணமாக அந்தப் பெட்டி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

“>

 

எந்தவிதமான உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் இன்றி ஆபத்தான மற்றும் எளிதில் வெடிக்கும் தன்மைகளைக் கொண்ட வேதிப்பொருட்களைக் கையாள்வது அல்லது கொண்டு செல்வது எந்தளவிற்கு உயிருக்க ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் ஒரு கடுமையான எச்சரிக்கையாக உணர்த்தியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயல்படுவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து தற்போது இணையத்தில் பலரும் எச்சரித்து வருகின்றனர்.