சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில நாட்களாகவே இன்று இறக்கத்துடன் தங்கம் விலை காணப்படுகிறது.
அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,05,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14,433 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,464 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 235 ஒரு கிலோ வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
