திமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தாங்கள் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கூட்டணி குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, செய்தியாளர்கள் தவெக தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “நான் இப்போது மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறேன், எதற்கு விஜய் பற்றிப் பேசுகிறீர்கள்? அவரே இப்போது மன உளைச்சலில் இருப்பார்” என்று கிண்டலாகப் பதிலளித்துச் சென்றார்.

விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும், அதற்கு ஒரு பிரபல நடிகையுடனான பழக்கமே காரணம் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.அதைக் குறிவைத்தே கருணாஸ் அவரைப் பற்றி அந்த கிண்டலான கருத்தைக் கூறியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

விஜய் தரப்பிலிருந்து இதுபோன்ற விவகாரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், கருணாஸின் இந்த நக்கலான பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.