திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட பூர்ணசந்திரன் என்பவரின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது தமிழ்நாடு பயணத்தின்போது, இந்த சோக சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக என்ன செய்திருந்தாலும் உண்மை கண்டிப்பாக வெளியாகும் என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், திமுகவின் நேர்மையற்ற தன்மையே இந்தச் சம்பவத்திற்கு காரணம் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.