முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திமுகவில் இணைந்திருப்பது வேதனைக்குரிய விஷயம் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தவர்களுடன் ஓபிஎஸ் இணைந்திருக்கக் கூடாது என்றும், இதை அவர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
