சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று விலை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1240 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,05,270 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13215 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூயத் தங்கத்தின் விளையும் அதிகரித்து ஒரு கிராம் 14416 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இதே போன்று வெள்ளி விலையும் 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
