தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்த நிலையில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.

இந்த தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவைகள் ஆதரவு கொடுத்ததால் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்தது.

இதன் காரணமாக திமுக தனித்து விடப்பட்ட நிலையில் சில கட்சிகள் மட்டுமே திமுக உடன் இன்னும் கூட்டணியில் நீடிக்கிறது. அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் அடுத்து வரும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்க தீவிரம் காட்டுவதாக செய்திகள் பரவி வருகிறது.

இதற்கிடையில் தற்போது புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. மேலும் கடந்த சட்டசபை தேர்தலோடு அதிமுக கூட்டணி முடிந்து விட்டதாக அந்த கட்சியின் தலைவர் பூவை ஜகன் மூர்த்தி அறிவித்துள்ளார். மேலும் இவர் கடந்த தேர்தலில் கே வி குப்பம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.