மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பெல்பாஹ் பகுதியில், பழைய பகை காரணமாக ஒரு கும்பல் பெண்ணின் வீட்டைத் தாக்கி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேகா என்ற அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வெளியே நள்ளிரவில் திரண்ட பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், வீட்டின் மீது கற்களை வீசியும், அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும் பயங்கரமான சூழலை உருவாக்கினர்.

துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டும், கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களால் வீட்டின் கதவை உடைக்கவும் அந்த கும்பல் முயன்றுள்ளது. இந்த வன்முறை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹர்ஷித் ஜாட், திபான்ஷு ஜாட் மற்றும் சுதான்ஷு ஜாட் உள்ளிட்ட பலரது மீது பெல்பாஹ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) கீழ் கொலை மிரட்டல், வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“>

 

குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.