“தமிழக அரசியலில் களம் எப்போதுமே அனல் பறந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கிய திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியின் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்து விஜய்யை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார். ‘அன்று டாஸ்மாக் விவகாரத்தில் கரூருக்கு வந்து வண்டி மேல் ஏறி எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசினார்கள், பாட்டெல்லாம் பாடினார்கள்; ஆனால், தற்பொழுது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் எவற்றைக் கட்டுப்படுத்தி விட்டார்கள்?’ என்று செந்தில்பாலாஜி மிக ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ‘டாஸ்மாக் விவகாரத்தில் தற்பொழுது வரை அந்தத் துறையின் அமைச்சர் வெறும் விளக்கத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார்; அன்று மேடையில் பாடிய பாட்டுக்கு இப்ப என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’ என்று விஜய்யின் தவெக அரசை நோக்கி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடுத்துள்ள இந்த நேரடிப் போர், தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.”
#WATCH | “கரூருக்கு வந்து எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசினார்கள். வண்டி மேல் ஏறி பாட்டெல்லாம் பாடினார்கள்”
-கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி#SunNews | #DMK | #SenthilBalaji pic.twitter.com/whTUxBKb2e
— Sun News (@sunnewstamil) June 3, 2026
“>
