“தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நள்ளிரவில் அரங்கேறிய  துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெட்ரோல் பங்க்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவன், வண்டியில் பெட்ரோல் போட்டுவிட்டு, பெட்ரோலுக்கான தொகையை கேட்டபோது,  திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த ஊழியர்களை நோக்கி காட்டி, கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார்.

நெஞ்சை பதறவைக்கும் இந்த ஒட்டுமொத்தக் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில்  பரவி வருகிறது.

“>