“தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்ட்டுகளும், அதிரடி அரசியல் கணக்குகளும் அரங்கேறி வரும் நிலையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் போடும் புதிய ராஜதந்திர கணக்கு ஒட்டுமொத்த கோட்டையையும் உலுக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதன் மூலம், ‘கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்’ தான் எவ்வளவு கவனமாக இருக்கிறோம் என்பதை சிஎம் விஜய் மிகத்தெளிவாக நிரூபித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் பாராட்டி வருகின்றனர்.
விஜய்யின் இந்த அதிரடி மூவ் காரணமாக, மற்ற கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளும் இனி தங்களது தோழமைக் கட்சிகளுக்கு சீட்டுகளை வாரி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் டெல்லிக்கு சென்றபோது ராகுல் காந்தியை விஜய் சந்திக்கவில்லை என்றும், இதனால் இருதரப்பிலும் பயங்கர உரசல் வெடித்துள்ளதாகவும் கிளம்பிய ஒட்டுமொத்த வதந்திகளுக்கும், இந்த சீட் ஒதுக்கீடு மூலம் சிஎம் விஜய் ஒரே அடியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
