திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் கடுமையான ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த தலைமை ஆசிரியர் பிரச்சனையைக் கண்டிப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட மாணவரை ரத்தக்காயம் வரும் வரை மிகவும் கொடூரமாகத் தாக்கியதாகக் அதிர்ச்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த மாணவரைச் சாதியை குறிப்பிட்டுத் தலைமை ஆசிரியர் மிகவும் இழிவாக திட்டியதாகவும், அதனாலேயே இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் பகிரங்கமாகப் புகார் அளித்துள்ளனர்.
மாணவரை மிருகத்தனமாகத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்திய அந்த தலைமை ஆசிரியர் மீது உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
