“தமிழக அரசியலில் எப்போதுமே அனல் பறக்கும் விவாதங்களும், அரசியல் தலைவர்களின் காரசாரமான பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கம் தான். அந்த வகையில், தற்போது கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முக்கிய பிரமுகர் செந்தில்பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து அதிரடியான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

‘திரையில், திரைப்படங்களில் வேண்டுமானால் வசனங்கள் பேசலாம்; ஆனால் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு செய்ய வேண்டிய முக்கியப் பணிகளை மறந்துவிட்டு, விஜய் இன்னும் வெறும் வசனங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று செந்தில்பாலாஜி நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ‘அரசு செய்யத் தவறிய கடமைகளைச் சுட்டிக்காட்டுவது தான் உண்மையான எதிர்க்கட்சியின் கடமை, அதை நாங்கள் செய்கிறோம்.  வெறும் சினிமா பாணியில் அரசியல் நடத்தக் கூடாது’ என்றும் அவர் காரசாரமாகப் பேட்டியளித்துள்ளார்.

“>