அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வட டல்லாஸ் பகுதியில், இந்தியர்களின் வருகை மற்றும் குடியேற்றம் சமீபகாலமாக பெருமளவில் அதிகரித்து வருவதாகக் கூறி, அங்குள்ள உள்ளூர் மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், அங்குள்ள சிட்டி ஹால் (City Hall) முன்பு திரண்ட அமெரிக்கர்கள், தங்களது ஆக்ரோஷமான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த டெக்சாஸ்வாசி ஒருவர், எல்லோரையும் அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக இந்திய தேசியக் கொடியை நடுரோட்டில் வைத்து கிழித்தெறிந்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கிருந்த இந்தியர்களிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளையின மக்கள் தங்களது பொறுமையை இழந்துவிட்டதையே இந்தச் சம்பவம் காட்டுவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்களது வேலைவாய்ப்புகளும் உள்ளூர் சூழலும் பாதிக்கப்படுவதாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
A Texas resident rips an Indian flag in front of city hall as Americans voice their anger against the mass Indian invasion in north Dallas.
This was always going to happen.
White people were only going to tolerate so much & it seems that White people are now all out of… pic.twitter.com/1TsbSTXyYp
— Lozzy B 🇦🇺𝕏 (@TruthFairy131) June 3, 2026
இதுவரை அமைதியாக இருந்த நிலை மாறி, இப்போது டல்லாஸ் பகுதியில் இனரீதியிலான பதற்றமும், மோதல் போக்கும் பகிரங்கமாகவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
