கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு நாவல் நகரில் தனியார் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரைக்கு கம்பி கட்டப்பட்டு சிமெண்ட் கலவை போடும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பாரம் தாங்காமல் எதிர்பாராதவிதமாக மேற்கூரை சரிந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதனால் பணியில் இருந்த மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.