கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எடை கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், உரிய ஆவணம் இன்றி கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து பறிமுதல் செய்கின்றனர்.

நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி, திருப்பதி சாரம், வெள்ளமடம் ஆகிய பகுதிகளில் குமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் கனிம வளங்களை ஏற்றி சென்ற இரண்டு டாரஸ் லாரிகளையும், அதிக பாரம் ஏற்றி வந்த ஒரு டாரஸ் லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியின் உரிமையாளர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.