கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் மீனாட்சியநாதப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் அதிகாரியாக இருக்கிறார். இவர் தற்போது குடும்பத்துடன் தஞ்சாவூரில் இருக்கிறார். இவருக்கு 2 மகள்களும், கணேஷ் ராஜா(21) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் கணேஷ் ராஜா இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்காக மீனாட்சி நாதபிள்ளை தனது குடும்பத்தோடு பத்மநாபபுரத்திற்கு சென்றார். இதனையடுத்து மாலை நேரம் பெருமாள் குளத்தில் கணேஷ் ராஜா மற்றும் உறவினர்கள் குளிக்க சென்றனர். நீச்சல் தெரியும் என்பதால் கணேஷ் ராஜா குளத்தில் நீண்ட தூரம் நீந்தி சென்றார்.

பின்னர் மீண்டும் குளத்தின் கரைக்கு வந்த போது உடல் சோர்வடைந்து கணேஷ் ராஜா குளத்தில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் அவரை காப்பாற்ற இயலவில்லை. இதுபற்றி அறிந்த ஊர் மக்கள் குளத்தில் குதித்து தண்ணீரில் மூழ்கிக் கிடந்த கணேஷ் ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கணேஷ் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குpதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.