சென்னையில் தமக்குச் சொந்தமான கட்டடத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு நேரில் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, பெண் வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில்தான் எஸ்பிஐ வங்கியின் என்.ஆர்.ஐ கிளை இயங்கி வருகிறது. அண்மையில் அங்குள்ள மின்தூக்கியில் திடீரெனக் பழுது ஏற்பட்டுள்ளது.

இதனால் செய்வதறியாமல் திகைத்த வங்கியின் என்.ஆர்.ஐ கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், உதவிகேட்டு கயல்விழியின் உதவியாளரைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால், மறுமுனையில் எந்தப் பதிலும் வராததால், வேறு வழியின்றி அவர் நேரடியாகக் தொலைபேசி மூலம் அழைத்து மின்தூக்கி பழுது குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார்.‌

தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்ட ஆத்திரத்தில் வங்கிக்கு நேரடியாகப் பாய்ந்து வந்த கயல்விழி, மேலாளர் ஹர்ஷீன் சிங்கிடம் போனில் அழைத்துத் பேசியது குறித்துக் கடுமையான வார்த்தைகளால் கேள்வி எழுப்பினார்.

அந்தச் சமயத்தில் மேலாளர் ஹர்ஷீன் சிங் தனது இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு சாதாரணமாக அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டு எல்லை கடந்த கோபமடைந்த கயல்விழி, திடீரென வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்தச் சண்டைக் காட்சிகள் அனைமும் வங்கியின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

கடந்த ஜூலை 20-ஆம் தேதியன்று அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, வங்கி மேலாளரைத் தாக்கிய கயல்விழி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பிஐ ஆர்.பி.ஓ முதன்மை மேனேஜர் நமச்சிவாயம் அவர்கள் காவல்நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.

“>

 

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதால், அரசியல் வட்டத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.