​”வறோம்.. ஜெயிக்கிறோம்!” – 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வேலூர் மாவட்டத்தையே அதிரவைக்கத் தயாராகிவிட்டார். வரும் 23-ம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் விஜய் மாபெரும் பரப்புரையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்காக தவெக நிர்வாகிகள் கொடுத்த மனுவைப் பரிசீலித்த காவல்துறை, தற்போது சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 25,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வேலூர் மாவட்டமே இப்போதே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

​அரசியல் களத்தில் விஜய் எடுக்கும் ஒவ்வொரு அடியும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வேலூர் மண்டலத்தில் விஜய்யின் வருகை மற்ற கட்சிகளின் ஓட்டு வங்கியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 25,000 பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.