ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் ஒருவர், தட்டிக்கேட்ட டிடிஇ (TTE) அதிகாரியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரி, வழக்கம்போல பயணிகளிடம் டிக்கெட்டுகளை சரிபார்த்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் டிக்கெட் கேட்கவே, அவரிடம் பயணச்சீட்டு இல்லை என்பது தெரியவந்தது.

​இதையடுத்து அதிகாரி அவரிடம் அபராதம் விதித்து தனது கடமையைச் செய்ய முயன்றபோது, அந்தப் பெண் திடீரென ஆத்திரமடைந்து டிடிஇ அதிகாரியை மிருகத்தனமாக தாக்கத் தொடங்கியுள்ளார். தான் செய்த தவற்றை மறைப்பதற்காக, அந்த அதிகாரி தன்னிடம் தவறாக நடக்க முயன்றது போல நாடகமாடி விக்டிம் கார்டையும் (Victim card) அந்தப் பெண் பயன்படுத்தியுள்ளார்.

கடமையைச் செய்த அரசு அதிகாரிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, “பெண் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்களை இப்படி தவறாகப் பயன்படுத்துவதா?” என்று நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனங்களையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.