பிரான்ஸ் நாட்டின் துலூஸ் நகரில் உள்ள ரங்குய் மருத்துவமனைக்கு, 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் துடித்தபடி வந்த நிலையில், அவரது எக்ஸ்-ரே (X-Ray) அறிக்கையைப் பார்த்த மருத்துவர்கள் மற்றும் போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துபோய் ஒட்டுமொத்த அவசர சிகிச்சைப் பிரிவையும் உடனடியாக காலி செய்த விசித்திர விபரீதச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்குள்ளே ஏதோ பொருள் மாட்டிவிட்டதாக அந்த வாலிபர் கூற, மருத்துவர்கள் உடனே எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்துள்ளனர். அதில், அவரது மலக்குடலுக்குள் (Rectum) சுமார் 8 இன்ச் நீளமுள்ள, முதல் உலகப் போரின்போது (1918) பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு (Artillery shell) ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அது எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய ஆபத்தான வெடிகுண்டாக இருக்கலாம் என்ற பயத்தில், உடனடியாக தீயணைப்புத் துறை, போலீஸ் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் (EOD team) வரவழைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அந்தப் பீரங்கி குண்டுக்குள் வெடிபொருட்கள் ஏதும் இல்லை என்பதை ராணுவ நிபுணர்கள் உறுதி செய்த பின்னரே, மருத்துவர்கள் தீவிர அறுவை சிகிச்சை செய்து அந்த வாலிபரின் உடலில் இருந்து குண்டை பத்திரமாக வெளியே எடுத்தனர்;
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பிரான்ஸ் நாட்டின் சட்டப்படி கடுமையான வெடிபொருட்களை சட்டவிரோதமாக வைத்திருப்பது பெரும் குற்றம் என்பதால், இந்த வாலிபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் இன்பத்திற்காகவும், விசித்திர ஆசைக்காகவும் (Sexual pleasure or fetish) அந்த வாலிபர் இந்த ஆபத்தான காரியத்தைச் செய்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், உலகப்போர் வெடிகுண்டையே மலக்குடலுக்குள் நுழைத்து மருத்துவமனையையே அலறவிட்ட இந்த வாலிபரின் வினோதச் செயல் தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களிடையே காரசார விவாதப் பொருளாக மாறியுள்ளது.
