உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டு வந்தாலும், ஆண்கள் மற்றும் பெண்கள் முற்றிலும் வெவ்வேறு மொழிகளில் பேசும் ஒரு விசித்திரமான கிராமம் நைஜீரியாவில் கண்டறியப்பட்டு ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நைஜீரியாவின் கிராஸ் ரிவர் மாநிலத்தில் சுமார் 7,000 மக்கள் தொகையுடன் அமைந்துள்ள ‘உபாங்’ (Ubang) என்ற சிறிய கிராமத்தில்தான் இந்த மொழி அற்புதம் அரங்கேறி வருகிறது.
இந்த கிராமத்தில் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஆண்களும் பெண்களும் முற்றிலும் தனித்தனி வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்;
View this post on Instagram
உதாரணத்திற்கு ‘தண்ணீர்’ என்ற வார்த்தைக்கு ஆண்கள் “மின்” என்றும், பெண்கள் “அமுன்” என்றும் முற்றிலும் மாறுபட்ட சொற்களைக் கூறுகின்றனர்.
இப்படி உணவிலிருந்து விலங்குகள் வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட அன்றாட பயன்பாட்டு வார்த்தைகள் இருபாலருக்கும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், யாருடைய உதவியும் இல்லாமல் இவர்கள் பேசும் வெவ்வேறு மொழிகளை ஒருவருக்கொருவர் மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்கிறார்கள்.
இங்கு பிறக்கும் குழந்தைகள் சிறு வயது முதலே தங்களின் பெற்றோர் மூலமாக இந்த இரண்டு வடிவங்களையும் கற்றுக் கொள்கின்றனர். தற்கால ஆங்கில மொழியின் ஆதிக்கம் மற்றும் நவீனமயமாக்கல் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தங்களின் இந்த அரிய கலாச்சார அடையாளத்தை உபாங் கிராம மக்கள் இன்னும் அழியாமல் பாதுகாத்து வருவது உலகளவில் சுற்றுலாப் பயணிகளையும் மொழி ஆராய்ச்சியாளர்களையும் இந்த கிராமத்தை நோக்கி ஈர்த்து வருகிறது.
