ராஜஸ்தானில் உள்ள ஒரு டோல்கேட்டில் (சுங்கச்சாவடி) ஏராளமான வாகனங்கள் தங்களது முறைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தன. அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள், விதிகளை மதிக்காமல் குறுக்கு வழியில் வரிசையை முந்திச் செல்ல முடிவு செய்தனர். தாங்கள் செய்த இந்த விதிமீறலை ஏதோ பெரிய சாதனை போல நினைத்து, அதனை தங்களது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர். மேலும், தாங்கள் வரிசையை ஏமாற்றிச் சென்றதை கேமராவின் முன்னால் மிகவும் பெருமையாகவும், உற்சாகமாகவும் கொண்டாடினர்.

100 cars waited their turn.

Then these clowns showed up, cut the entire queue, jumped straight to the front, and started laughing.

This is exactly what’s wrong with society.
Not intelligence. Not confidence. Just pure entitlement and zero shame.

People who think they are above… pic.twitter.com/fKFjvXyZXm

— Ankit Pandey (@iamankitpande) June 8, 2026

தங்கள் வீரப் பிரதாபத்தை உலகிற்கு காட்ட நினைத்து அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த அந்த வீடியோ, தற்போது அவர்களுக்குப் பெருத்த வினையாக முடிந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞர்களின் பொறுப்பற்ற செயலைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். “சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காத இதுபோன்ற செயல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது” என்று சமூக வலைத்தளவாசிகள் தங்களது கண்டனங்களை மிகக் கடுமையாகப் பதிவு செய்து வருகின்றனர்.