அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, திருமணமான பெண் ஒருவர் தனது காதலன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் செல்வத்துடன் திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவர் வெளிநாட்டில் இருந்த நேரத்தில், தனது வீட்டின் பின்புறம் வசித்த ராஜா என்பவருடன் பிரியாவிற்குத் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கணவர் கஷ்டப்பட்டு அனுப்பிய பணத்தை பிரியா தனது காதலனுக்காகச் செலவழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஊர் திரும்பிய செல்வத்திற்கு மனைவியின் இந்த விவகாரம் தெரியவந்ததால், தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மறுநாள் காலை பிரியா தனது காதலன் ராஜாவின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்து ராஜா தலைமறைவாகியுள்ள நிலையில், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாவின் கணவர் மற்றும் காதலனின் குடும்பத்தாரிடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
