அமெரிக்காவில் ஒரு பெண் தன்னுடைய கணவருக்கு செய்யும் உணவுக்காக பணம் வாங்குவதாக தன்னுடைய இணையத்தில் தெரிவித்திருந்தார். அவர் தன் கணவருக்காக தயார் செய்யும் உணவிற்காக  நாள்தோறும் இந்திய மதிப்பில் 1160 ருபாய் வசூலிக்கிறார். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த பெண் சமுக வளைத்தளத்தில் பணம் வசூலிப்பதற்காக விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். “என் கணவர் வேலைக்கு செல்லும் போது அவருக்கு தினமும் மதிய உணவு சமைத்து கொடுக்கிறேன். இதற்காக ஒரு நாளைக்கு அமெரிக்க டாலரின் மதிப்பில் 10 பவுண்டுகள் வசூலிக்கிறேன்.

அவர் வேறெந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் இந்த பணத்தை வேறொருவருக்ககு கொடுக்கப் போகிறார். அந்த பணத்தை ஏன் என்னிடம் தரக்கூடாது? “என கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால் நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தங்கள் துணையிடம் காட்டும் அன்புக்கும், சமையலுக்கும் விலையை நிர்ணயிக்ககூடாது என‌ பதிவிட்டு வருகின்றனர்.