பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவின் மோசமான ஃபீல்டிங் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரில், அயர்லாந்து பேட்ஸ்மேன் டிம் டெக்டர் அடித்த பந்து உயரே பறந்து வர, அதைச் சரியாகப் பிடிப்பதற்காக ஷிவம் துபே பின்னோக்கி ஓடினார்.
பந்து அவர் கைக்கு மிக அருகில் வந்தும், அதைத் தவறவிட்டதோடு பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி நான்கு ஓட்டங்களுக்கும் சென்றது. துபேவின் இந்தத் தவறான ஃபீல்டிங் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஏமாற்றத்தை அளித்தது.
கேட்சைப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட தடுமாற்றத்தில், ஷிவம் துபே அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்து இரண்டாக உடைந்தது. நீண்ட நாட்களாகவே தனது ஃபீல்டிங் திறமைக்காக சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகும் துபே, இந்தப் போட்டியில் செய்த இந்தத் தவறு மீண்டும் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
THE DROPPED CATCHES FROM SHIVAM DUBE.
– Just look at the reaction of Arshdeep Singh on catch drop from Dube. pic.twitter.com/rq0T2IteQp
— Maina Singh (@Maina_Singhx77) June 26, 2026
“>
ஒரு எளிமையான கேட்சைத் தவறவிட்டது மட்டுமல்லாமல், கண்ணாடியையும் உடைத்துக்கொண்ட இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இச்சம்பவம், துபேவின் பேட்டிங் திறமைக்கு இணையாக அவரது ஃபீல்டிங் திறமை இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
