இந்தியாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் போன்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த செல்போனை வாங்கி பயன்படுத்திய பயனாளர்கள் பல்வேறு புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ப்ரோ போனின் ஓவர் ஹீட்டிங் பிரச்சினை வாடிக்கையாளர்களிடையே அதிகம் பேசப்பட்டது. இதற்கான காரணத்தை கண்டறிந்த ஆப்பிள் நிறுவனம் விரைவில் அதற்கான சாப்ட்வேர் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதன்படி ஐபோன் 15 தற்போது  iOS 17.0.3  அப்டேட்டை வெளியிட்டுள்ளது.