அமேசான் விற்பனை தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனை அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 59 ஆயிரத்து 900 ரூபாய் விலை கொண்ட ஐபோன் 13 மாடல் வெறும் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் என்று அமேசான் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் அமேசான் தளத்தின் சிறப்பு தள்ளுபடி, வங்கி தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளிட்டவை அடங்கும். இதனால் ஐபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.