இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்ப கூகுள் பிக்சல் வாட்ச் 2, உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் நான்காம் தேதி அறிமுகமானது. இதில் Qualcomm 5100 SoC, SpO2 மானிட்டர், ECG மானிட்டர், மல்டி-பாத் ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், ஸ்லீப்பிங் மானிட்டர், ப்ளூடூத், வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 306mAh பேட்டரி உள்ளதால் 24 மணி நேரத்திற்கு பேட்டரி திறன் நீடிக்கும். இந்தியாவில் இந்த வாட்சின் விலை ரூ.39,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.