சுவாசிக்கும் காற்றுக்கும், பெற்ற தாயின் பாசத்திற்கும் ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூறுவார்கள். புனிதமான தாய்-மகன் உறவுக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள கொடூரச் சம்பவம் ஒன்று மனித சமுதாயத்தையே உரைய வைத்துள்ளது.

பெற்ற தாய் என்றும் பாராமல், மதுபோதையில் மூழ்கிய மகன் ஒருவன் தன் சொந்தத் தாயிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அவலம் அரங்கேறியுள்ளது. பெற்ற வயிற்றிலேயே அடிக்கும் வகையில் அமைந்த இந்த மிருகத்தனமான சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுவின் கொடூர பிடியில் சிக்கிய அந்த நபர், தன் சுயநினைவை முற்றிலும் இழந்து, தன்னைப் பெற்று வளர்த்த தாய் என்பதைக் கூட மறந்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான். தாயின் கதறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பகுதி மக்கள், அங்கு நடந்த கொடூரத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

உடனடியாகக் களத்தில் இறங்கிய பொதுமக்கள், மனிதநேயமற்ற முறையில் நடந்துகொண்ட அந்த மகனைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற மக்கள், அவனுக்குச் சரியான பாடம் புகட்டிப் பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மதுப் பழக்கம் மனிதனின் பகுத்தறிவையும், உறவுகளின் புனிதத்தையும் எந்தளவிற்குச் சீரழிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாகும். தாய்க்குத் துரோகம் இழைத்த அந்த மிருகத்தனமான மகனைக் காவல்துறையினர் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புனிதமான தாய்மைக்கே களங்கம் விளைவித்த அந்த நபருக்குச் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், இணையவாசிகளும் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.