ரயில் பாதை அருகே செல்போனில் பேசிக்கொண்டே சென்ற இளைஞர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஜலந்தரில் உள்ள டிஏவி ஹார்ட் ரயில் நிலையம் அருகே ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஜம்முவைச் சேர்ந்த 28 வயதான சுக்விந்தர் குமார் என்கிற டிங்கு, ரயில் பாதை அருகே உள்ள மண் பாதையில் நடந்து சென்றபோது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வேகமாக வந்த ரயிலை அவர் கவனிக்கவில்லை என்றும், அருகில் இருந்தவர்கள் எச்சரித்தும் அந்த சத்தம் அவருக்கு கேட்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
रूह कांप जाने वाला मंजर
वीडियो देखकर रूह कांप जाएगी। 😢
पंजाब के जालंधर में 31 जुलाई को DAV कॉलेज के पास रेलवे ट्रैक पार करते समय एक तेज़ रफ्तार ट्रेन की चपेट में आने से एक व्यक्ति की दर्दनाक मौत हो गई।
एक छोटी-सी लापरवाही ज़िंदगी पर भारी पड़ गई। कृपया रेलवे ट्रैक केवल… pic.twitter.com/Mt2TWAAstE
— Abhishek Tyagi (@abhishek03tyagi) August 1, 2026
சிசிடிவி காட்சிகளில், செல்போனில் பேசிக்கொண்டே ரயில் பாதையை நோக்கி நடந்து செல்லும் சுக்விந்தர், தன்னை நோக்கி ரயில் வருவதை அறியாமல் இருப்பது பதிவாகியுள்ளது. சில நொடிகளில் வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த காட்சி, ரயில் பாதை அருகே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
காய்கறி கடையில் வேலை செய்து வந்த சுக்விந்தர் குமார், கடந்த 4 ஆண்டுகளாக ஜலந்தரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று மாலை பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் செல்போன் அழைப்பில் ஈடுபட்டதாக அவரது பணியாளர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
