ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் கூப்பர் கோணாலி, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒன்லி ஃபேன்ஸ் கிரியேட்டர் ஆனி நைட் வெளியிட்ட வீடியோவில், பல ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் தனக்கு அனுப்பியதாக கூறப்படும் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த பட்டியலில் கூப்பர் கோணாலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஆனி நைட் வெளியிட்ட வீடியோவில், பல்வேறு விளையாட்டு வீரர்களின் பெயர்களையும் அவர்கள் அனுப்பியதாக கூறப்படும் மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் காட்டியுள்ளார். இதில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய கால்பந்து லீக் வீரர்கள் என்றும், கிரிக்கெட் வீரர்களில் கூப்பர் கோணாலி மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூப்பர் கோணாலி யார் என்று தனக்கு தெரியாது என்றும், அவருக்கு ஆஷஸ் தொடரில் வாழ்த்து தெரிவித்ததாகவும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
Australian and Punjab Kings Cricketer cricketer Cooper Connolly messaged this Only Fans Model and she leaked it.
Of all the women he could have messaged, he chose her…why😭 pic.twitter.com/29cz59ii4J
— Incognito (@Incognito_qfs) August 1, 2026
வெளியிடப்பட்டதாக கூறப்படும் உரையாடல் ஸ்கிரீன்ஷாட்களில், மெல்போர்னில் தங்கியிருக்கும் இடம் மற்றும் எப்போது அங்கிருந்து செல்லப் போகிறார் என்பது குறித்து கூப்பர் கோணாலி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “என்னை சந்திக்கவும்” என்ற வகையிலான சில செய்திகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
View this post on Instagram
இந்நிலையில், ஆனி நைட் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கூப்பர் கோணாலி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், அந்த மெசேஜ்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்காத நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
