தந்தையின் தோள்கள் எப்போதும் பிள்ளைகளின் கனவுகளுக்கு வலிமையானவை என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பியாரேலால் என்ற தொழிலாளி, உடல் ஊனமுற்ற தனது மகள் மான்யாவைத் தனது முதுகில் சுமந்து சென்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வைத்துள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு விபத்தில் தனது கால்களை இழந்த மான்யா, மனம் தளராமல் படிப்பைத் தொடர விரும்பினார். மகளின் ஆசையை நிறைவேற்ற, அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் பியாரேலால் அவரைத் தனது முதுகிலேயே சுமந்து பள்ளிக்கு அழைத்துச் சென்று வருகிறார்.
தேர்வு மையத்திற்கு மகளைச் சுமந்து வரும் இவர்களது வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் கண்ணீர் மல்கப் பாராட்டி வருகின்றனர். “தந்தையின் அன்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் எல்லையே இல்லை” என்றும், “பெண் பிள்ளைகள் சுமையல்ல, அவர்கள் ஒரு குடும்பத்தின் பலம்” என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
” बेटी बाप की गोद से बड़ी हो सकती है
लेकिन दिल से कभी बड़ी नहीं हो सकती है”यूपी के हाथरस जिले के मोहल्ला नौरंगाबाद के मजदूर प्यारेलाल ने अपनी विकलांग बेटी मान्या को पीठ पर बैठाकर यूपी बोर्ड हाईस्कूल exam दिलाया,
दरअसल पिछले वर्ष क्लास 9 th में मान्या का पैर मशीन में फंस जाने… pic.twitter.com/Wv2mrDx1mx
— Shailesh Verma (@shaileshvermasp) February 20, 2026
“>
எந்தச் சூழலிலும் கனவுகள் தடைபடாது என்பதை மான்யாவின் துணிச்சலும், அவரது தந்தையின் தியாகமும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.
