தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி கற்று வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் அமர்ந்து வரும் நிலையில், தமிழகத்திற்கு வரும் வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாகவும், பானிபூரி விற்பதாகவும் திமுக எம்பி கனிமொழி சோமு பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கனிமொழி சோமுவின் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக இது போன்ற இழிவான கருத்துக்களைப் பேசுவது வாடிக்கையாகிவிட்டது என்றும், ஊழல் நிறைந்த இந்த ஆட்சி பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.