ஸ்பெயின் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து வெற்றிக்குப் பிறகு நடைபெற்றக் கொண்டாட்டத்தின் போது, இளம் நட்சத்திர வீரர் லாம்மின் யமால் செய்த ஒரு மனிதநேயச் செயல் ரசிகர்களின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வெற்றிக்குப் பிந்தைய மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் திளைத்திருந்த வேளையில், லாம்மின் யமாலைச் சந்தித்து வாழ்த்து கூற ஆசையுடன் ஓடிவந்த ஒரு இளம் பெண் ரசிகையை அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த சிறுமி மிகுந்த ஏமாற்றத்துடன் பின்வாங்க நேரிட்டது.
பாதுகாவலர்கள் அந்தச் சிறுமியைத் தடுப்பதைக் கவனித்த லாம்மின் யமால், சற்றும் யோசிக்காமல் உடனடியாகத் தலையிட்டார். பாதுகாப்பு ஊழியர்களிடம் பேசி அந்தச் சிறுமியைத் தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும், அவரைத் தன்னிடம் வர அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பின்னர், அச்சிறுமியை அன்புடன் அருகில் அழைத்து, அவருடன் கை குலுக்கி, புகைப்படங்களுக்கும் முகம் மலரப் பதிலளித்தார். பாதுகாவலர்களின் தடைகளைத் தாண்டித் தன் மீது அன்பு காட்டிய ரசிகைக்கு, அந்த மைதானத்திலேயே மறக்க முடியாத ஒரு பொன்னான தருணத்தை யமால் பரிசளித்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.
சர்வதேச அளவில் களத்தில் தனது அசாத்திய திறமையால் பல சாதனை சாதனைகளைப் படைத்து வரும் லாம்மின் யமால், மைதானத்திற்கு வெளியே தனது ரசிகர்களிடம் காட்டும் இந்த எளிமையும் பரிவும் அவரை வெறும் சிறந்த ஆட்டக்காரராக மட்டுமன்றி, ஒரு உயர்ந்த பண்பாளராகவும் உயர்த்திக்காட்டியுள்ளது என உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
Lamine Yamal Calls Back Young Fangirl After Security Stops Her During Spain’s FIFA World Cup Celebrations | Video https://t.co/o9sOAYaqY9
“>
