இன்றைய நவீன காலத்தில் அலுவலகப் பணியாளர்கள் தங்களுடைய மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு காரணமாக விடுப்பு கேட்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது.
தூங்கி எழும்போது ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சோர்வு காரணமாகத் தன் மேலாளருக்கு மெசேஜ் செய்த ஊழியர் ஒருவர், “என் மனநிலை சரியில்லை, இன்று என்னால் படுக்கையை விட்டு எழ முடியவில்லை, அதனால் எனக்கு விடுப்பு வேண்டும்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஊழியரின் இந்த அசாதாரணமான மற்றும் நேர்மையான காரணத்தைக் கேட்ட மேலாளர், இது மிகவும் என்று கூறி அவரது விடுப்பு விண்ணப்பத்தை உடனடியாக மறுத்துள்ளார்.
விடுப்பு மறுக்கப்பட்டதால் கடும் கோபமடைந்த அந்த ஊழியர், “இந்தச் சூழ்நிலையில் என்னால் அலுவலகத்திற்கு வர முடியாது, இன்றே எனது கடைசி வேலை நாளாகக் கருதிக் கொள்ளுங்கள்” என்று கூறி திடீரென தனது ராஜினாமா கடிதத்தை வீசியுள்ளார். உடனே பதறிப்போன மேலாளர், உனது முழு மற்றும் இறுதி ஊதியம் மற்றும் அனுபவச் சான்றிதழ் பாதிக்கப்படும் என்றும், நீ வேலைக்கு வரவில்லை என்றால் உன்னைத் தலைமறைவானவராகக் கருத நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
தன் சக ஊழியரை மிரட்டும் வகையில் பேசிய மேலாசிரியரின் போக்கைக் கண்டு மேலும் கொதிப்படைந்த அந்த நபர், FNF மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டு வாட்ஸ்அப் உரையாடலிலேயே தனது பணியை விட்டு விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
ரெடிட் சமூக வலைதளத்தில் வெளியான இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன், நெட்டிசன்கள் மத்தியில் அனல் பறக்கும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் உண்மையானதா அல்லது கட்டுக்கதையா என்று ஒரு தரப்பினர் சந்தேகம் எழுப்பி வந்தாலும், கடுமையான வேலைச் சூழலில் ஊழியர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் மிரட்டும் போக்கு எந்தளவிற்கு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது என்று மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அலுவலகத்தில் விடுப்பு கேட்பது போன்ற சாதாரண விஷயத்திற்காகத் தொடங்கிய வாக்குவாதம் இறுதியில் ராஜினாமா வரை சென்றுள்ள இந்தச் சம்பவம் தற்போது கார்ப்பரேட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
