கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு இடத்தில், தொழிலாளி ஒருவர் தற்செயலாகத் தோண்டியபோது மர்மமான முறையில் புதைக்கப்பட்டிருந்த மரப்பொம்மை ஒன்று சிக்கியுள்ளது. அந்தப் பொம்மை முழுவதுமாக ஏராளமான ஊசிகளும் ஆணிகளும் குத்தப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அந்தத் தொழிலாளி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பழங்கால மூடநம்பிக்கைகள் மற்றும் பில்லி, சூன்யம் போன்ற காரியங்களுக்காகவே இதுபோன்று பொம்மைகளில் ஆணிகளைக் குத்தி நிலத்திற்கடியில் புதைப்பது வழக்கம் என்பதால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Lindaikejiblog (@lindaikejiblogofficial)

தொழிலாளி சற்றும் தாமதிக்காமல், கையில் இருந்த பிளாஸ்  உதவியைக் கொண்டு அந்தப் பொம்மையில் செருகப்பட்டிருந்த ஒவ்வொரு ஆணியையும் ஒவ்வொன்றாக உருவி வெளியே எடுக்கத் தொடங்கினார். ஆணிகளை அகற்றியபடியே, யாரோ ஒருவரின் வஞ்சகச் செயலுக்காக அந்தப் பொம்மை பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று அவர் ஆவேசமாக வசைபாடினார்.

மேலும், தான் இந்த ஆணிகளை அகற்றியதன் மூலம், அந்தப் பொம்மையின் பிடியில் சிக்கித் தவித்த ஏதோ ஒரு நபர் இப்போது முற்றிலும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக அவர் தீவிரமாக நம்பித் தெரிவித்தார்.

இணையத்தில் பெருமளவில் வைரலாகி வரும் இந்த விவகாரம் தொடர்பில் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. ஜோதிடம் மற்றும் அமானுஷ்ய சக்திகளை கண்மூடித்தனமாக நம்புபவர்கள் சிலர், அந்தத் தொழிலாளி ஒரு நல்ல காரியத்தைச் செய்து யாரோ ஒருவரின் சாபத்தை நீக்கியிருப்பதாகப் புகழ்ந்து வருகின்றனர்.

அதேவேளையில், கல்வி அறிவடைந்த நவீன காலத்தில்கூட இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்னும் தொடர்வது வேதனை அளிப்பதாகக் கூறி அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனை கொண்ட பலரும் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.