இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களில் லைக்குகளையும் வியூஸ்களையும் அள்ளுவதற்காக இளைய தலைமுறையினர் செய்யும் விபரீத சாகசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ரயில் நிலையம் ஒன்றில் நின்றுகொண்டு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் பிளாட்ஃபார்மில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை நோக்கித் துணிச்சலாகப் பல்டி அடித்துள்ளார். பிளாட்ஃபார்ம் போல இல்லாமல் தண்டவாளப் பகுதியில் கூர்மையான கற்கள் இருப்பதால், தரை இறங்கும் போது எதிர்பாராதவிதமாக அவரது கால்களின் சமநிலை முழுமையாகத் தவறியுள்ளது.
रील बनाने के चक्कर में ट्रेन के पटरी पर गिर जाते आप तो मुंह पापड बन जाता।
वीडियो आप देख रहे होंगे रील
बनाने के चक्कर में। लड़का पटरी पर गिरता है और उसका बैलेंस बिगड़ जाता लोहे से टकराने से थोड़ा बचता है। pic.twitter.com/ZwQ6tFKdN6— mansha maurya 🪔 (@ssksingh84) July 22, 2026
சமநிலை தவறிய வேகத்தில் முன்னோக்கிச் சென்று தண்டவாளத்தில் படுமோசமாக அவர் தலைக்குப்புறக் கவிழ்ந்து விழுந்த இந்தத் திடுக்கிடும் காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு முகத்தில் கடுமையான காயங்கள் ஏதுமின்றித் தப்பியுள்ள போதிலும், ரீல்ஸ் மோகத்தால் மனிதர்கள் எந்தளவிற்குத் தங்களது உயிரைப் பணையம் வைக்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் @ssksingh84 என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் இது போன்ற ஆபத்தான சாகசக் காட்சிகள் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே பலரின் பொதுவான கருத்தாக உள்ளது.
