பீகார் மாநிலம், சப்ரா நகரில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் முகமது இமாம் ராசா என்பவர் தகாத முறையில் நடந்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆசிரியர் சிறுமியின் தனிப்பட்ட மொபைல் எண்ணிற்குத் தொடர்ந்து பாலியல் ரீதியான அத்துமீறல் மற்றும் ஆபாசச் செய்திகளை அனுப்பியதைச் சிறுமியின் பெற்றோர் தற்செயலாகக் கண்டறிந்து அதிர்ந்து போயினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினரும், கொதித்தெழுந்த பொதுமக்களும் இணைந்து அந்த ஆசிரியரைப் பிடித்துக் கையும் களவுமாகப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக விரைந்து செயல்பட்ட காவல் துறையினர் அந்த ஆசிரியரைக் கைது செய்து அவரிடமிருந்த செல்போனை அதிரடியாகக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட அந்த மொபைல் போனை டிஜிட்டல் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, மாணவியுடன் நடத்தப்பட்ட பல அசிங்கமான உரையாடல்களும், அதிர்ச்சியூட்டும் ஆபாசப் புகைப்படங்களும் அதில் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது வேறு யாருடனாவது இதுபோன்று தொடர்பில் இருந்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மாணவிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித சமரசமும் இன்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர் மற்றும் பெற்றோர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கல்வி கற்பிக்க வேண்டிய இடத்திலேயே இதுபோன்ற மட்டமான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியரின் செயல் சமுதாயத்தின் முகம் சுளிக்க வைத்துள்ளதுடன், பள்ளிகளில் படிக்கும் பிஞ்சுகளின் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய அச்சத்தையும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.